36. சிறுத்தொண்ட நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 36
இறைவன்: பிரமபுரீஸ்வரர்
இறைவி : திருக்குழலம்மை
தலமரம் : ஆத்தி
தீர்த்தம் : ?
குலம் : வைத்தியர்
அவதாரத் தலம் : திருச்செங்காட்டங்குடி
முக்தி தலம் : திருச்செங்காட்டங்குடி
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை - பரணி
வரலாறு : திருச்செங்காட்டங்குடி என்னும் தலத்தில் வேதியர் குலத்தில் பரஞ்சோதியார் என்னும் பெயர் தாங்கி சோழரின் அமைச்சராய் விளங்கினார். வெண்காட்டு நங்கை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து சிவனடியார்களுக்குத் தினமும் அமுது படைக்கும் தொண்டில் சிறந்து விளங்கினார். சிறுத்தொண்டர் என்னும் பெயரும் பெற்றார். இவர் பெருமையை உலகறியச் செய்யத் திருவுளம் கொண்ட எம்பெருமான் ஒரு நாள் இவர் வீட்டுக்கு பைரவ வேடம் பூண்டு வருகிறார். அவர் நாயனாரிடம் ஒரு தாய்க்கு ஒரு மகனாக அங்கம் பழுதில்லா சிறுவனை அறுத்துக் கறி சமைத்துத் தருவீரா என வினவ, நாயனாரும் அதற்கு உடன்பட்டு தம் ஒரே மைந்தனான சீராளனை அடியார் விரும்பியபடியே கறி சமைத்து தலை உறுப்பு நீங்கலாக ஏனையவற்றைப் படைத்தார். அதனையும் தருக என அடியாராக வந்த இறைவன் கேட்க பணிப்பெண் அதனையும் பரிமாற, அடியார் உன் மகனையும் கூப்பிடுக என்றார். சிறிதும் யோசியாமல் நாயனாரும் அவரது மனைவியும் வெளியில் சென்று சீராளா என அழைக்க சிறுவன் ஓடோடியும் வந்தான். அடியாரைக் காணவில்லை. விசும்பில் இறைவன் இறைவியோடும் முருகனோடும் காட்சி கொடுத்து அருள் புரிந்தான்.
முகவரி : அருள்மிகு. உத்திராபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி– 609704. நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04366-270278

இருப்பிட வரைபடம்


சீதமதி அரவினுடன் செஞ்சடைமேற் செறிவித்த
நாதன்அடி யார்தம்மை நயப்பாட்டு வழிபாட்டால்
மேதகையார் அவர்முன்பு மிகச்சிறிய ராய்அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர் எனநிகழ்ந்தார் அவனியின்மேல்.

- பெ.பு. 3679
பாடல் கேளுங்கள்
 சீதமதி


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க